Standard

வாழ்க்கையில் முட்டி மோதிய போதும்,
உன்னை விட்டதில்லை,
பல மணி நேரம் யோசித்து யோசித்து எழுதிய போதும்,
மனம் திருப்தியடையாத அந்த தருணங்களில்
உன்னை வேண்டாம் என்று ஒதறியது இல்லை.
உணர்ச்சிகள் கடலலைகள் போல்
திரண்டு ஓடிய போதும்,
மனம் வெறுத்து உன்னை ஒதுக்கியது இல்லை.

என் ஆத்மாவில் அழமாய் பதிந்த,
நீயல்லவா என் முகக் கண்ணாடி,
தோழ்மை புரிந்து கொள்ளாத போது
நீ என்னை அறிந்தாய்.
உறவு என்னை சீண்டிய போது,
நீ என்னை அணைத்தாய்.
அணை போட்டு போட்டு
ஒடுக்கி வைக்க முயற்சித்தப் போது,
என்னுடைய கண்ணீரை
கவிதையாய் வடிக்க நீ எனக்கு வழி வகுத்தாய்.
தாய் கூட அவ்வபோது புண்படுத்த,
நீ கூறவில்லை ஒரு தீச்சொல்லும்.

பல குறைகள் இருப்பினும்,
நானும் ஒரு அதிஷ்டசாலித்தான்.
உன்னை பெற்றதால்.
உன் நட்பைப் பெற்றதால்.

Comments are closed.