சிங்கையில் தமிழ் இலக்கியவாதிகள்

Standard

தமிழ் என்று சொன்னாலே நம் மனதிற்கு வரும் முதல் நாடு, தமிழ் நாடு. கதை, கட்டுரை, கவிதை என்று கூறினால், நம் மனதிற்கு வரும் முதல் பெயர்கள் ஜெயகாந்தனும் வைரமுத்துவும். என்றாவது ஒரு நாள், நாம் புளம் பெயர்ந்து வந்த நாட்டிலும் தரமிக்க இலக்கியங்களைப் படைத்தவர்கள் இருப்பார்கள் என்று எண்ணி பார்த்தது உண்டா. நான் பார்த்தேன். அதற்கு முக்கிய காரணம், நான் இப்போதுத்தான் சிங்கை இலக்கிய வரலாற்றைப் படித்து முடித்தேன். அதுவும் தேர்வுக்காக. ஒரு தேர்வுக்காக படித்த கவிதைகள் மனதில் கொஞ்சம் ஆழமாக வே பதிந்துவிட்டன என்று கூறினால், அது பொய்யாகாது. நான் படித்தது தேர்வோடு போகாமல், இங்கேயும் கொஞ்சம் கிறுக்கி வைத்தால், மற்றவர்களாவது படிப்பாரக்ளே என்றே ஆசையில்,

இதோ சில கவிதைகள்…..

நான் எழுதியவை அல்ல, சிங்கை இலக்கியவாதிகள் எழுதியவை…

முதலில் என்னை மிகவும் கவர்ந்த கவிஞர் பரணனின் கவிதை,

புத்தகம்:எதிரொலி

ஆசிரியர்: பரணன்

தலைப்பு: நமது பொருளாதாரம்

கவிதை:

இதிலும் அதிலும் செலும்கவனம்!

எதிலும் இல்லை முழுக்கவனம்!

இதுதான் இன்றைய இனப்பயணம்!

எழவா முடியும் இந்தஇனம்?

 

புற்கள் வளர்ந்தன பனைமட்டம்!

புரியார் நிலைகள் அடிமட்டம்!

கற்கள் வளரும் எனச்சொல்வார்,

கருதார் இனியும் எதைவெல்லார்?

 

பொருளா தாரம் பிறர்கையில்

புதையக் கண்டும் வெட்கமுறா

அருளா தாரம் பொதுநோக்கம்!

அடிமைத் தனமா தரும் ஆக்கம்?

 

கற்பனை தருமா இனவாழ்வு?

கனவா விரும்பும் பொருள்வாழ்வு?

அற்புதம் என்பது மடிதூக்கம்!

அடடா தமிழா இல்லைவெட்கம்?

 

நினைத்தால் இனியும் நீயெழலாம்!

நிமிர்ந்தால் விண்ணை நீதொடலாம்!

முனைந்தால் எவர்க்கும் நீமுதலாம்,

முனையா திருந்தால் துயர்பதிலாம்!

-முற்றும்-

 

அடுத்து…..

புத்தகம்: சிறகுகள்

ஆசிரியர்: திரு வெந்கடம்

தலைப்பு: பூவைக்குப் பூச்சூட்டு

பட்டமரம் துளிர்க்கிறது

பால்சுரக்கத் துடிக்கிறது!

மொட்டைமரம் என்றேஏன்

மூடமனம் நினைக்கிறது?


கட்டியவன் கட்டையிலே!

கட்டிவெல்லம் பொட்டலிலே!

கெட்டிமேளம் கேட்காதா?

கிள்ளை மணம் பார்க்காதா?

பூவிழியாள் பூவிழந்தாள்

பூவோடு பொட்டிழந்தாள்

பூவிழந்த பூவைக்குப்

பூமுடிக்கும் நெஞ்சமுண்டோ?


-முற்றும்-

இப்போதைக்கு இரு கவிதைகளை மட்டும்தான் இங்கு எழுதி உள்ளேன். மற்ற கவிதைகளை அந்த அந்த நூலிகளில் படிக்கலாம். 🙂 இவர்கள் இருவரையும் தவிர்த்து, சிங்கை முகிலன் மனிதச்சுவடு என்ற நூலில் எழுதிய மனிதனும் மிருகமும் என்ற கவிதையும் என்னை மிகவும் கவர்ந்தது. அந்த கவிதை மிகவும் நீலமாக உள்ளதால் இங்கே எழுத வில்லை.

இவர்களைப் போல இன்னும் பல சிங்கப்பூர் தமிழ் கவிஞர்கள் மற்றும் நாவலாசிரியர்கள் இருக்கிறார்கள். இதுக்குப் பிறகு நானும் இவர்களுடைய கதைகளையும் கவிதைகளையும் படித்துப் பார்க்க போறேன். நீங்களும்த்தான் படித்துப் பாருங்களேன். 🙂

இவ்விணையப்பக்கம் சில முன்னோடி தமிழ் இலக்கியவாதிகளைப் பற்றி கூறுகிறது.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s