மனதில் பட்டது….

Standard

பிறக்கும் போது ஒரு குழந்தை

வளர்ந்த பிறகு ஒரு மங்கை.

பாதம் வழிக்கும்,

தரையில் நடக்காதே.

நிலவைப் பார்க்காதே,

வெட்கத்தில் தன் மறைத்துக் கொள்ளும்

என்று பாடி சென்றனர் புலவர்கள்.

தரையில் காயம் இன்றி நடக்கக் கூட

செறுப்பு இல்லாத ஒரு ஜிவனாக

அல்லவா இப்போது இருக்கிறாள்.

மகள், மனைவி, தாய், பாட்டி என்று பல அவதாரங்கள் போடும் பெண்ணைக்

காப்பது ஆணினம் என்று மார்த் தட்டி கொள்கின்றனர் பலர்.

இங்கே சகோதரர்கள் பலர் இருந்தும்,

வலியிலும் வேதனையிலும் அவதிப் பட்டு இறக்கும் பல தங்கைகளைக் காணுகிறேன்.

மகளைக் கையில் வைத்துக் காக்க வந்த தந்தையோ,

மகளின் தயவில் வாழும் இந்த காலம்.

அண்ணனாம், தம்பியாம், தந்தையாம்…

இறுதியில் ஒரு தாயின் துணையுடன் அல்லவா மடிகிறாள் ஒரு மகள்.

கண்ணைப் போன்ற பிள்ளைகளை அண்ணன்கள் புறகணிக்க,

கணவன் கைவிட,

தாயின் கையில் விட்டு விட்டுச் சென்று இருக்கிறாளே,

அவளுடைய ஆத்மா சாந்தி அடையுமா?

தாயின் உள்ளம்த்தான் சாந்தம் காணுமா?

கண் கலங்குகின்றன இங்கே.

அதைத் தவிர என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

-இலக்கியா-

Advertisements

About Illakiyaa

அவ்வப்போது ஏற்படும் எண்ணங்கள் கிறுக்கல்களாக தோன்றும் இடம் இது.

2 responses »

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s