Posted by: Illakiyaa on: October 25, 2009
படித்தேன் பரணரின் திருப்புமுனையை
அதன் எதிரொலி கேட்டது எனது மனதினிலே
தமிழன் என்ன அவ்வளவு சிறியவனா?
கல்வியில் சிறந்தவோர் பலர் இருக்க
சிறுமை வாய்ந்தோர் தமிழன் என்கிறார்.
வாரி வழங்க பலர் இருக்க,
நயவஞ்சகன் தமிழன் என்கிறார்.
காரணம் பல கூறினும்,
தமிழனைப் போல ஒருவன் இல்லை இப்புவியில்.
அவ்வபோது தலை குனிந்தாலும்,
பல முறை தலை நிமிர வைத்து உள்ளான் தமிழன்.
சிறிய மனம் படைத்தவன் இருப்பது இயற்கை.
வாழ்க்கையின் நீதி, அனைத்திலும் இரண்டு.
உறவிலும் இரண்டு.
வாழ்விலும் இரண்டு.
ஒளியிலும் இரண்டு.
இப்படி இருக்க,
தமிழன் ஒவ்வொருவனும் நல்லவன் என கூற வேண்டும் என
நினைப்பது மடமைத்தனமல்லவா?
ஒருநாள் வரும்,
நான் தமிழன் எனக் கூற நெஞ்சம் மகிழும்.
-இலக்கியா-
sorry “சீறு கவிதை” சீறு கதை ஏழுதுலாமே
October 27, 2009 at 11:45 am
தமிழன் பற்றி நல்ல கவிதை. நீக்கள் சீறு கவிதை ஏழுதுலாமே. வாழ்த்துக்கள்